sireku

ஜனாதிபதியின் இஸ்ரேலிய விஜயம்: முஸ்லிம்கள் கவலை கொள்வது ஏன்?

MAHINஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மத்திய கிழக்கிற்கான விஜயத்தின் போது, இஸ்ரேலிற்கு இரண்டு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை, அறை நூற்றாண்டுகளாக பின் கதவினால் நாட்டிற்குள் நுழைவதற்குத் தருணம் பாத்திரந்தஇஸ்ரேலிற்கு, பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாக மாறியுள்ளது. ஜனாதிபதி தனது சுற்றுப் பயணத்தின் போது, ஜோர்தான், மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை என்பவற்றிற்கும் விஜயம் செய்திருந்தார். 1950 களில் நடுப்பகுதியில் இலங்கையில் இஸ்ரேலுக்குக் கதவடைப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பஸ்தீன் ஒருமைப்பாட்டிற்கான இலங்கைக் கமிட்டியின் தலைவராக மூன்று தசாப்தங்களாக பதவி வகித்தவர் என்பது இஸ்ரேலிற்குக் கிடைத்த மற்றொரு வெற்றியாகும்.
தந்திரம் மற்றும் அடுத்தவர்கள் மீதான குள்ளநரித்தனம் என்பவற்றின் மூலம் தனது இருப்பைத் தக்க வைத்து வருகின்ற இஸ்ரேல், இலங்கையில் கதவடைப்பு செய்யப்பட்டிருந்த நிலையிலும்,  இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும்  ஒரே நேரத்தில், ஒருவரையொருவர் அறியாத முறையில் பயிற்சி வழங்கியது. இவ்விதம் யுத்த காலத்தில் நாட்டிற்குள் இஸ்ரேல் புகுந்து கொண்டது.
அதிலிருந்து தனது சொந்த முகத்தையோ, பலஸ்தீனியர்களின் அவலங்களையோ மைய நீரோட்ட மீடியாக்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி விடாமல் பார்த்துக் கொள்வது உள்ளடங்கலாகப் பல்வேறு கைங்கர்யங்களில் அது ஈடுபட்டது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் கொடுமைகளுக்கு எதிரான பலஸ்தீனியர்களின் போராட்டத்தில் உறுதியான ஆதரவாளியாக இலங்கை இருந்து வந்த நிலையில், ராஜபக்ஷவின் விஜயம் அதற்கு முடிவுரையாக அமைந்திருக்கிறது.
இதற்கு எதிராகக் குரல் எழுப்ப முடியாத இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகளின் அரசியல் வங்குரோத்து நிலைமையையும் இந்த விஜயம் தோலுரித்துக் காட்டியுள்ளது.
பலஸ்தீனியர்களின் நலன் என்பதற்கு அப்பால், இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்த மட்டில், தமது சொந்த விவகாரங்களிலும் இப்பிரச்சினை தொடர்புபடுகின்றது. இஸ்ரேலின் பிரசன்னம் இருக்கும் இடங்களில் எல்லாம், அதன் இரகசியப் புலனாய்வு அமைப்பான மொஸாட்டின் பிரதான இலக்காக இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களே உலகளவில் இருந்து வருகிறார்கள். அநாயாசமாகப் பணத்தை அள்ளி வீசி, உள்நாட்டுக் கைக்கூலிகளைப் பணியில் அமர்த்தி, முஸ்லிம்களுக்கு எதிராக ஏனைய சமூகங்களைத் தூண்டி விடுகிறார்கள்.
உதாரணமாக, குறிப்பிடத்தக்க அளவிலான இனவாத கும்பல்கள் தமது முஸ்லிம் விரோதப் பிரசாரத்தை ஆரம்பிக்கும் முன்பே, இஸ்ரேலின் பிரசன்னம் சிங்கள, முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை உண்டு பண்ணலாம் என முஸ்லிம் புத்தி ஜீவிகள் பலர் அச்சம் கொண்டிருந்தனர்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராகத் தற்போது இடம்பெற்று வரும் தாக்குதல் அலைகளை நோக்கும் போது, இப்பயம் சரியானதே என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஸியோனிஸ்ட்டுகளோடு குசலம் கொண்டாடி வருகின்ற அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு, இவர்கள் உண்மையில் யார் என்பதோ, இவர்களது பின்புலம் என்ன என்பது பற்றியோ அறிவிருப்பதில்லை. உண்மையைச் சொல்வதானால், இந்த ஸியோனிஸ்ட்கள் ஜேர்மன் நாஸிகளைப் போன்றவர்களே!.
1860 ஸ்விட்ஸர்லாந்தின் பெஸ்ல் நகரில் சந்தித்துக் கொண்ட சியோனிஸத் தலைவர்கள், பலஸ்தீனியர்களை உதைத்து, அவர்களது வீடுகள் மற்றும் நிலங்களில் இருந்து அவர்களை வெளியே தள்ளி விட்டு, அப்போது உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கீழ் இருந்த பஸ்தீனில் யூதத் தேசம் ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்தார்கள்.
பல்வேறு குழறுபடிகளைச் செய்து, முதலாம் உலகப் போரில் துருக்கியைக் கவிழ்த்து, பலஸ்தீனைப் பிரத்தானியக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்கள். பிரித்தானியாவின் ஆசிர்வாதத்தோடு, பலஸ்தீனியர்களைப் படுகொலை செய்து, அகதி முகாம்களுக்குள் விரட்டியடித்தார்கள். இப்பலஸ்தீனியர்கள் இன்றும் முகாம்களில் துன்புற்று வருகிறார்கள். பிறகு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், ரஷ்யா என்பவற்றைக் கொண்டு, ஐநா சபையில் குளருபடிகளைச் செய்து, ஐ.நாவின் அடிப்படைகளுக்கு முரணாகவும், ஏற்றுக் கொள்ளப்பட்ட எல்லா நெறிமுறைகளுக்கு முரணாகவும், ஐ.நாவின் அங்கீகாரத்தோடு திருடப்பட்ட பலஸ்தீனிய நிலத்தில், இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள்.
1அதிலிருந்து இஸ்ரேல் பல்வேறு யுத்தங்களைத் தொடுத்து, மேலும் பலஸ்தீன் மற்றும் அரபு நாடுகளின் நிலங்களைச் சுவீகரித்துக் கொண்டது. மத்திய கிழக்கை ஒரு கொலைக்களமாக மாற்றியது. 1930 இல் இருந்து, பலஸ்தீனில் இஸ்ரேல் 63 பாரிய படுகொலைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளது. இஸ்ரேலின் குற்றங்களைக் கண்டு, எதுவும் செய்வதற்குக் கையாலாகாத நிலையில், ஐ.நா சபை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்ற கோல்ட் ஸ்டோன் தலைமையிலான குழுவினர் சமர்ப்பித்த தனது சொந்த அறிக்கையையே ஐ.நாவினால் நடைமுறைப்படுத்த முடியவில்லை.
அத்தோடு இஸ்ரேல் நிற்கவில்லை. மத்திய கிழக்கை மேலும் சிறு சிறு நாடுகளாகப் பிரித்து, அதன் மூலம் தனது மேலான்மையைப் பிராந்தியத்தில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் விரும்புகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் என்பவை கூட இதனைத்தான் விரும்புகின்றன.
இதன் விளைவுதான், பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்ற போர்வையில், முஸ்லிம் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய சக்திகள் இணைந்து தொடுத்திருக்கின்ற யுத்தங்கள். ஒன்றன் பின் ஒன்றாக முஸ்லிம் நாடுகள் ஆக்கிரமிக்கப்பட்டு, அழிக்கப்படுகின்றன. மில்லியன் கணக்கான அப்பாவி மக்கள் கொலை செய்யப்படுகிறார்கள். மேலும் மில்லியன் கணக்கானவர்கள் இவற்றின் போது அகதிகளாகின்றார்கள்.
அமெரிக்காவின் தேச பிதாக்களுள் ஒருவரான பெஞ்சமின் பிராங்க்ளின் யூதர்களைக் குறித்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்:
“(யூதர்கள்) அவர்கள் நாட்டுக்குள் புகுவதைன் நீங்கள் தடுக்கவில்லையானால்,  உங்கள் பிள்ளைகள் உங்களைச் சபிப்பார்கள்…”
இந்த முன்னறிவித்தல் இன்று உண்மைப்படுத்தப்பட்டு விட்டது. யூத லொபிகள்தான் இன்று அமெரிக்காவை ஆட்சி செய்கின்றன. இதன் காரணமாக அமெரிக்கா இஸ்ரேலைக் கண்மூடித்தனமாக ஆதரிக்கிறது. இஸ்ரேலின் முடிவற்ற குற்றச் செயல்கள் குறித்து எந்தவொரு அமெரிக்க அரசியல்வாதியும் வாய் திறக்க முடியாது என்கின்ற அளவுக்கு நிலமை மோசமாகியுள்ளது. பராக் ஓபாமா சிகாகோவைத் தளமாகக் கொண்ட யூதக் கோடிஸ்வரர் ஒருவர் மூலம் கவனமாக ஆராயப்பட்டு, பதவியில் அமர்த்தப்பட்டதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. (யூதர்கள் விரும்பாத ஒருவர் அமெரிக்காவில் ஜனாதிபதியாக முடியாது என்பது பிரபலமான விடயம்).
ஏனைய நாடுகளைப் போல் அல்லாமல், இஸ்ரேல் இங்கு வந்திருப்பது இலங்கைக்கு உதவுவதற்கோ, அல்லது நல்லுறவொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்ல. தமது உலகளாவிய ஆதிக்கத்தை நிறுவிக் கொள்வதற்கான தமது நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாகவே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள்.
1தம்மோடு கருத்து முரண்பட்டுக் கொள்பவர்களின் வாய்களை மூடுவதற்காக கொலைகளையும் அவர்கள் புரியலாம். அது அந்தத்த நேரத்தின் தேவையைப்  பொறுத்தது.    அவர்கள் சமூகங்களை ஒன்றோடொன்று மோத விடுவார்கள் என்பது மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தில் இருந்தே சில துரோகிகளை, குறிப்பாக அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து, சமூகத்திற்குள் பிரிவினையையும், பிரச்சினைகளையும் உண்டு பண்ண முயற்சி செய்வார்கள்.